சிவகங்கை : கண்மாயில் 70 ஏக்‍கரை ஆக்‍கிரமித்து தென்னை மரம் வளர்ப்பு - அரசு ஊழியர்களை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை அருகே தென்னை மரங்களை அகற்ற சென்ற அரசு ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் சிலர் தென்னை மரங்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்த பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தென்னை மரங்களை வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, திருப்புவனம் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மறியலில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

Night
Day