சிவகங்கை: குடிநீருக்காக பல தலைமுறையாக அள்ளல்படும் பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குடிநீருக்காக காடுகளை கடந்து பல கிலோ மீட்டர் அலைய வேண்டிய நிலை, பல வருடங்களாக நீடித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருகோஷ்டியூர் அருகே உள்ள சோலுடையான்பட்டி கிராமத்திற்கு அரசு சார்பில் பல வருடங்களாக எவ்வித குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் காட்டு வழியில் 4 கிலோமீட்டர் நடந்து சென்று ஊற்றுநீரை எடுத்து வருவதாக வேதனை தெரிவித்த பெண்கள், அவ்வப்போது ஊருக்குள் வாகனத்தில் கொண்டு வரப்படும் குடிநீரும் தூய்மையற்ற முறையில் உள்ளதாக குற்றம் சாட்டினர். பல தலைமுறையாக தண்ணீருக்காக அள்ளல்படும் தங்களது நிலையை மாற்ற அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

varient
Night
Day