சிவகங்கை: குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் விளையாட்டு மைதானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானம் குடிமகன்களின் பாராக மாறிவருவதால் மாணவர்கள் அவதிக்‍குள்ளாகி வருகின்றனர். திருப்புவனத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப்  பள்ளியின் எதிரிலேயே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்திற்குள் அமர்ந்து மது குடித்துவிட்டு குடிமகன்கள் காலி பாட்டிலை உடைத்து சென்று விடுகின்றனர். இதனால் பள்ளி நாட்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படுகின்றன. அதனால் பள்ளிக்‍கு இரவு காவலரை நியமிப்பதுடன் போலீசார் இரவு ரோந்து வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day