சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் அகாடமியில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆலோசகர்கள் கலந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மாணவ மாணவிகளை கவரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்களும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் பூமிநாதன், நேர்முக அரசு தேர்வு எழுத செல்லும் மாணவிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Night
Day