சி.பி.எஸ்.இ. பள்ளி முற்றுகை - பெற்றோர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். 

அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் 19 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தற்போது வரை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதால், தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். அப்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே சிபிஎஸ்இ-க்கு அங்கீகாரம் இருப்பதாகவும், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவர்களின் கல்வியோடு விளையாடிய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்காக ஒரு வருடமாக தயாராகி வந்ததாகவும், தற்போது தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Night
Day