சீமானுக்கு எதிராக புதிய ஆதாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர் . 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சீமான் ஏமாற்றிவிட்டதாக 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து பெங்களூருவில் வசிக்கும் நடிகையிடம் நேரில் சென்று வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Night
Day