சீமான், நாதக நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் : திருச்சி எஸ்.பி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி பொறுப்பாளர்கள் இருவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக திருச்சி எஸ்.பி வருண்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் ஐபிஎஸ் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்து வருகிறார். சமீபநாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின்பேரில் இவர்கள் இருவருக்கு எதிராக இணையத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் இருந்து தானும், தனது மனைவியும் விலகுவதாக எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் வலைதள இணைய உரையாடல்களில் இருந்து தானும், தனது மனைவியும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை என்று தெரிவித்த வருண்குமார், வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Night
Day