சீமான் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க மறுப்பு - ஐகோர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சீமான் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து  பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Night
Day