சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரியார் பற்றிய சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதுகுறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடவடிக்கை குறித்து 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் மதுரை அண்ணா நகர் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day