சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி, சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர். சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day