சீவலப்பேரி பகுதியில் நிலவும் பிரச்னைகளை எடுத்துரைத்த முதியவர்கள் - கனிவுடன் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் சீவலப்பேரி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, ஏராளமான மகளிர் திரண்டு நின்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கரங்களில் கழக கொடிகளுடன், மேள தாளங்கள் முழங்க, புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என்ற வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அலை அலையாய் ஏராளமான பெண்கள் திரண்டு நின்று புரட்சித்தாய் சின்னம்மாவை ஆர்வத்துடன் வரவேற்றனர். தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை சின்னம்மாவிடம் எடுத்துக்‍ கூறினார்கள். இதனை மிகுந்த கவனத்தோடு புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் பெருமளவில் திரண்டு நின்ற கழகத் தொண்டர்கள் மற்றும் பொது மக்‍களிடையே புரட்சித்தாய் சின்னம்மா உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து, சீவலப்பேரி பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கூறிய புகார்களை புரட்சித்தாய் சின்னம்மா கவனமாக கேட்டறிந்தார். சீவலப்பேரி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை என அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தெரிவித்தார்.

சீவலப்பேரி பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவை முதியோர்கள் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் தங்களது வீடு பழுதடைந்தது என்றும், அதனை இதுவரை யாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதனை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டு அறிந்தார்.




Night
Day