சுதந்திர தினத்தில் சின்னம்மாவின் 'ஜெயலலிதா இல்லத்தில்' தேசியக்கொடி ஏற்றப்பட்டது

எழுத்தின் அளவு: அ+ அ-

78-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் போயஸ் கார்டன் ”ஜெயலலிதா இல்லத்தில்” தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் தமிழகமாகும். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தியாகச்சுடர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதோடு, தியாகிகளுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

அந்த வகையில் அம்மாவின் வழியில் பயணிக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

Night
Day