சுயநலத்திற்காக திமுகவினர் ஆர்ப்பாட்டம் - தமிழிசை சௌந்திரராஜன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் தோல்வியை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காவும்  அறிவிக்காத தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக அரசியல் செய்வதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய அவர், தமிழக முதலமைச்சருக்கு தங்களது கண்டனத்தை முழுமையாக இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதிவு செய்வதாக கூறினார். அறிவிக்காத ஒன்றிற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் திமுக அரசு, ஏன் காவேரி பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றார். இது மறுவரையறை கூட்டம் இல்லை என்றும், ஊழலை மறைப்பதற்கான கூட்டம் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

Night
Day