சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த வாரம் முதல் வரை மிதமாக தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி  காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் யாரும் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை வைத்துள்ளனர்.  

Night
Day