சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்துச் செய்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

சுவாமி விவேகானந்தரின் 162ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும், புரட்சித்தாய் சின்னம்மா, தேசிய இளைஞர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சிடன் தெரிவித்துள்ளார்.
 
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 162ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் "தேசிய இளைஞர் தின" நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது - அதாவது, "உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன - உனக்கு நிகர் நீயே - உன் மீது நம்பிக்கை வை - உன்னால் எதுவும் முடியும்" என்றார் சுவாமி விவேகானந்தர் - "பலத்தைக் கொண்டு, பலவீனத்தை போக்க வேண்டும் - வந்தோம் இருந்தோம் என்று போவது வாழ்க்கை அல்ல" என்பதைப் புரியவைத்தவர் சுவாமி விவேகானந்தர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர் - இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், "100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர் - அவருடைய எண்ணங்கள் ஈடேறும் வகையில், நம் சமூகம் முன்னேறுவதற்கும், நம் தேசம் வலிமை பெறுவதற்கும் ஒவ்வொரு இளம் வயதினரும் அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

"எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்" என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மனதில் வைத்து பெண்ணினத்தை காத்திடுவோம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திரம் பெறவேண்டும் என்ற எழுச்சி தோன்றும் வகையில் நம் தேசத்தின் பெருமைகளை உரக்க முழங்கிய விவேகானந்தரின் வழியில், துரோக சிந்தனைகள் ஏதும் இல்லாமல், சுயநலமின்றி, பொதுநலத்தோடு வாழும் பண்பையும், உயர்ந்த எண்ணங்களையும், தூய்மையான சுற்றுப்புற சூழலையும், நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே, நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக எண்ணி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day