செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா - புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்றார்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவிகளும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பங்கேற்பதற்காக தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கல்லூரி பேராசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி மாணவிகள் பூங்கொத்து கொடுத்து புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலைமகள் அலைமகள் மலைமகள் திருக்கோயில் சன்னதியில் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது திருக்கோயில் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து மகளிர் தின விழா நடைபெற்ற அரங்கத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கல்லூரி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மகளிர் தின நிகழ்ச்சி தொடங்கியது. விழா மேடையில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து புரட்சித்தாய் சின்னம்மா, மகளிர் தின நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

விழாவில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கல்லூரி மாணவிகள் சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் கோமதிக்கு புரட்சித்தாய் சின்னம்மா சால்வை அணிவித்து கெளரவித்தார்.

Night
Day