செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 28வதுபட்டமளிப்பு விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 148 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில், 2023-24 கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் தரவரிசை தேர்வில் சிறப்பிடம் பெற்ற செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியை சேர்ந்த 18 மாணவிகள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சிறப்பு இடங்களை பெற்ற 53 மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பத்தக்கங்களும், கல்லூரி அளவில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற  781 மாணவிகள், முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 367 மாணவிகள் உட்பட்ட மொத்தம் 1148 மாணவிகளுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன.

கல்லூரி தாளாளர் டாக்டர் திவாகரன் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி டீன் டாக்டர் M. ஜவஹர்லால் மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி கெளரவித்தார்.

மேலும் ஒட்டுமொத்த கல்லூரி அளவில் 2023 - 24 கல்வி ஆண்டில் சிறப்பிடம் பெற்ற இளநிலை மாணவி கீர்த்தனா மற்றும் முதுநிலை மாணவி இலக்கியா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day