செங்கல்பட்டு : கை வைத்தாலே அரசு தொகுப்பு வீடுகளின் கட்டடச் சுவர்கள் ஆடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் அரசு தொகுப்பு வீடுகளை தரமற்ற முறையில் கட்டிக்கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். வடபட்டினம் ஊராட்சியை சேர்ந்த இருளர் மக்களுக்கு, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுமார் 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும், கை வைத்தாலே கட்டடச் சுவர்கள் ஆடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், தொகுப்பு வீடுகளை தரமாக கட்ட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

Night
Day