செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிச்சென்ற காட்டுமாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து காட்டு மாடு ஒன்று தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து சமீப காலமாக விலங்குகள் அடிக்கடி தப்பித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் பூங்காவில் இருந்து தப்பித்துச் சென்ற 2 அனுமன் குரங்குகள் பல நாட்கள் தேடுதலுக்கு பின் பிடிபட்டன. இந்த நிலையில் நேற்று காட்டு மாடு ஒன்று கூண்டிலிருந்து தப்பித்ததை அடுத்து அதனை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் வனவிலங்குகள் தப்பித்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day