செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த 'யுனெஸ்கோ' தேர்வுக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தென்கொரியாவில் இருந்து வந்த யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாங்ஜாங் லீ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், தொல்லியல் துறையினர், மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் குழு செஞ்சிக் கோட்டையை நேரில் பார்வையிட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என 30 பேர் கொண்ட குழுவை சந்தித்து பேசினர். இந்த குழுவினரின் பரிந்துரை அடிப்படையில், செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day