செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது,. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கு முன்பாக, வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை என்றும் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் தான் பயத்தில் வர மறுப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள் ,'செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க ஏன் இவ்வளவு அவசரம் என்றும் இன்னும், 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும் போது, அவர் அமைச்சராக தொடர்ந்தால் என்ன நடக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? என்பதை அவரது தரப்பிடம் கேட்டுச் சொல்லுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், அப்படி அமைச்சராக தொடர விரும்பினால், முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம்,' என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day