செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அண்மையில்  அமலாக்கத்துறை கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பே, அவரது தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகததுடன் தலைமறைவானார். இதனால் அவரை தேடிக் கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருந்துவிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

அதன்பிறகும் அசோக் குமார் ஆஜராகவில்லை. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அசோக் குமார் தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Night
Day