செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நாளை வரை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யக்‍கோரி அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வேறு வழக்‍குகளை காரணம் காட்டி அமலாக்கத் துறை வழக்கு, விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத் துறை மனுவுக்‍கு, செந்தில் பாலாஜி தரப்பில் பதிலளிக்‍குமாறு கூறி விசாரணையை வருகிற ஜனவரி 31ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

varient
Night
Day