செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Night
Day