சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம், மர்ம நபர்கள் சிலர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி, நேற்று முன்தினம் அதே கல்லூரியில் பொறியியல் பிரிவில் 4ம் ஆண்டு படிக்கும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில், பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த சில மாணவர்கள், அதனை வீடியோ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீடியோவை காண்பித்து இருவரையும் மிரட்டிய மாணவர்கள், ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் பெண் அதிகாரிகள் புகார் அளித்த பெண்ணிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழைய அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 64ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் கல்லூரி மாணவர்களா? அல்லது வெளி ஆட்களா? என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், கல்லூரி வளாகத்தில் போதை பொருள் புழக்கம் ஏதும் இருந்ததா?, அதனால் இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day