சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 5 ஏரிகள் - நீர் இருப்பு குறைந்து வருவதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் 5 ஏரிகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் சென்னையின் நீர் ஆதாரத்திற்கு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால், இந்த 5 ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடியில், தற்போது நீரின் அளவு 3 ஆயிரத்து 164 கனஅடியாகவும், பூண்டி ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில், தற்போது 2 ஆயிரத்து 752 கனஅடியாகவும் நீர் இருப்பு உள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. புழல் ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடியில், தற்போது 2 ஆயிரத்து 720 கனஅடியாகவும், ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், தற்போது 138 கனஅடியும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில் தற்போது 413 கனஅடியாக நீர் இருப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவில் கையிருப்பு 75 சதவீதம் குடிநீர் மட்டுமே இருப்பதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 30 நாட்களில் 10 சதவீதம் குடிநீர் ஏரிகளில் இருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day