சென்னைக்கு ரெட் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , சென்னை , திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடதிசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்றும், அடுத்து 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனறும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளதாகவும் கூறினார். 

மேலும் அடுத்த நான்கு நாட்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்த அவர் அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போது வரை 12 செ.மீட்டர் மழை பதிவாக்கியுள்ளதாகவும், இது இயல்பை விட 84 சதவீதம் அதிகம் என பாலச்சந்திரன் கூறினார். 

Night
Day