சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்து விட்டு வீடு திரும்பிய லட்சக்கணக்கான மக்களால் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

விமானப்படை  தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கண்களுக்கு விருந்தாக அமைய உள்ள இந்த சாகச கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்றும் இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, சுமார் 15 லட்சம் பொதுமக்கள் வரை இந்நிகழ்வை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானப்படை அதற்காக சில போக்குவரத்து மாற்றங்களையும் செய்தது.

இருப்பினும் காலை முதலே லட்சக்கணக்கான மக்கள் கூட தொடங்கியதால் சென்னை காமராஜர் சாலை, வாலாஜா சாலை கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.

சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் உருவானது. குறிப்பாக விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முறையான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day