சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஆயிரத்து 80 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு மேலும் 320 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 360க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day