சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-ஐ தொட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்க்கு 160 உயர்ந்த நிலையில், இன்று மேலும் 640 ரூபாய் அதிகரித்து 54 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day