சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 600 ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தினசரி தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 88 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 88 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Night
Day