சென்னையில் ஆபரணத்தங்கம் ரூ. 55,000-ஐ தாண்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 885 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 97 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 480 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day