சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு 56 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தங்கம் விலை, நான்கே நாட்களில் ஆயிரத்து 680 ரூபாய் வரை உயர்ந்து மீண்டும், 57 ஆயிரத்தை தாண்டியது. 

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 உயர்ந்து, 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 145 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 101 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day