சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 355 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதேபோல், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 105 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day