சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.56,760-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 102 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Night
Day