சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. அதன்படி இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 850 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 96 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்து,  96 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day