சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொடுவதும், திடீரென விலை குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றம் இன்றி 86 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 86 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Night
Day