சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 91 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day