சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 840ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து 8ஆயிரத்து 980 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நகைபிரியர்கள் கவலையடைந்துள்ளனர். 

Night
Day