எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கும், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வடகடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் நாளை லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும், 20 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும், வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.