சென்னையில் இன்று வெயில் அடிக்கும் - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்று வெயில் அடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் நேற்று மதியம் முதல் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வெயில் அடிக்கும் என்றும், வெப்ப சலனத்தால் இன்று மாலை முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார். 

Night
Day