சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக, சென்னை, மும்பை,  அகமதாபாத், மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.

Night
Day