சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 சரிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 440 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 680க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day