சென்னையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சார ரயில்கள் இயக்குவதில் தாமதம்..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர்மழை பெய்து வந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. 

சென்னையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சார ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அம்பத்தூர், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, ராயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே சாலையில் சென்றனர். மேலும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. 

Night
Day