சென்னையில் கடும் பனிமூட்டம் - விமான சேவை பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னையில் நிலவிய பனிமூட்டத்தால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

Night
Day