சென்னையில் கனமழை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவை தொடர்ந்து இன்று காலையும் கனமழை கொட்டித்தீர்ப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும் கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைகாலிலும் டிசம்பர் 17ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், இன்று அதிகாலையும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. ராயபுரம், பாரிமனை, அண்ணாசாலை, தி.நகர்,  கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி போரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்கிறது. அதிகாலையில் பெய்த கனமழையால் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Night
Day