சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது வேதனையை அளிக்கிறது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது என்றும், இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான இந்த விளம்பர அரசின் நிர்வாக திறமையின்மையாலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் இந்த அரசு தோற்றுப் போனதாலும் இன்றைக்கு தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது - அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்றும், இந்த வன்செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, சென்னையில் ஒரே நாளில் எட்டு இடங்களில் பட்டப்பகலிலேயே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே பகல் நேரங்களில் கூட யாராலும் வெளியில் நடமாட முடியவில்லை - வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன - இதன்மூலம் திமுக தலைமையிலான ஆட்சியில், தமிழகத்தில் பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் பொங்கல் பண்டிகையின் போது 10 இடங்களில் இதே போன்று செயின், வழிப்பறி சம்பவங்கள் நடந்தன - அதற்கு இந்த அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால், தொடர்ந்து இதே குற்றம் மீண்டும் நடைபெற்றிருக்காது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை என்றும், திமுக தலைமையிலான அரசு சம்பிரதாய நிகழ்ச்சிகள் போல சட்டமன்றத்தை பெயரளவிற்கு நடத்திக்கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் பொதுமக்களின் பிரச்சனைகளை பேசுவதை விட அரசியல் பேசுவதுதான் பிராதனமாக இருக்கிறது - அதேபோன்று இந்த விளம்பர அரசு மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியமான விசயங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு, மொழிப் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு, தங்களோடு கூட்டணியில் உள்ள அண்டை மாநிலங்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு வெறும் நாடகங்களை அரங்கேற்றுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான அரசால் யாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை - இந்த அரசு நீடிக்கின்ற வரை இன்னும் எத்தனை நபர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக போகிறார்களோ தெரியவில்லை - இந்த மக்கள் விரோத ஆட்சியின் இறுதிக்காலத்தில் தமிழகம் இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க போகிறதோ தெரியவில்லை - இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.