சென்னையில் கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி, தலைக்கு குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்காக  மதுரவாயலில் இருந்து எழும்பூர் நோக்கி சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற லாரி நுங்கம்பாக்கம் வானிலை மைய அலுவலகம் அருகே திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. லாரியில் சுமார் 11 டன் எடையிலான சிமெண்ட் கலவை இருந்ததால் லாரியை விரைவாக அப்புறப்படுத்த முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் கடும் அவதியடைந்தனர். இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கல்லூரி சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

Night
Day