சென்னையில் காற்றுடன் மழை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.  தேனாம்பேட்டை, பாண்டி பஜார், தியாகராய நகர், அண்ணா சாலை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட மாநகர் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்கிறது.

மேலும் திருவேற்காடு, வானகரம், காட்டுப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஐயப்பன்தாங்கல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் சற்று சிரமத்தை அனுபவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Night
Day