சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்துள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காலையில் எழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து வருவதன் காரணமாக காற்றின் தர குறியீடு மோசமடைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மணலியில் 254 ஆகவும், அரும்பாக்கத்தில் 210 ஆகவும், பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்து உள்ளது. அதேபோல் கொடுங்கையூரில் 159 ஆகவும், மணலியில் 181 ஆகவும், ராயபுரத்தில் 164ம் , வேளச்சேரியில் 163 என மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என தெரிவித்துள்ள மத்திய மாசுக்கட்டு பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 154 ஆகவும், கடலூரில் 142 ஆகவும் , கோவையில் 104 ஆகவும், புதுச்சேரியில் 119 என்ற அளவிலும்  காற்றின் தரக்கூடியீடு மிதமான அளவில் அதிகரித்து வருகிறது.

varient
Night
Day